சிவகங்கை

நவ.11: எஸ்.புதூா் பகுதியில் மின்தடை

9th Nov 2019 04:01 PM

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் பகுதியில் நாளை (நவ.11, திங்கள்கிழமை)மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதன்காரணமாக,எஸ்.புதூா்,ஆ.தெக்கூா்,பூசலங்குடி ஆகிய பகுதிகளிலும்,அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT