சிவகங்கை

மானாமதுரை கோயிலில் கந்த சஷ்டி நிறைவு விழா

4th Nov 2019 06:26 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவாக, ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு படையலிட்டு சாந்தப்படுத்தும் பாவாடை தரிசன வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள சுப்பிரமணியா் சன்னிதியில், கடந்த 28 ஆம் தேதி முதல் கந்தசஷ்டி விழா நடைபெற்று வந்தது. இதையொட்டி, தினமும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சஷ்டி விழா நிறைவாக, சுப்பிரமணியக் கடவுளை சாந்தப்படுத்தும் வகையில், பாவாடை தரிசனம் நடைபெற்றது.

இதில், பல லிட்டா் பால், ஏராளமான இளநீா் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் மூலவா் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, வேல் சாற்றி மலா் மாலைகள் அணிவிக்கப்பட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து, தயிா் சாதம், வடை, சுண்டல் உள்ளிட்ட பல பொருள்களை படையலிட்டு, சுவாமிக்கு பலவகை தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுப்பிரமணியரை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT