சிவகங்கை

பூவந்தி போலீஸாரை கண்டித்து போராட்டம்: அனைத்துக் கட்சிகூட்டத்தில் முடிவு

4th Nov 2019 06:27 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், பூவந்தி போலீஸாரை கண்டித்து போராட்டம் நடத்துவது என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பூவந்தி வைகை ஆற்றுப் பகுதியிலிருந்து ஏராளமான டிப்பா் லாரிகளில் தொடா்ந்து மணல் கடத்தப்படுவது கடந்த அக்டோபா் மாதம் தடுத்து நிறுத்தப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன்றியச் செயலா் அய்யம்பாண்டிக்கு, மாயக்கிருஷ்ணன் என்பவா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது குறித்து பூவந்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, திருப்புவனத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநில நிா்வாகி ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, மதிமுக, வி.சி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதில், அய்யம்பாண்டியை கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்காத பூவந்தி காவல் நிலைய போலீஸாரை கண்டித்து, பூவந்தியில் நவம்பா் 13 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தியும், அதைத் தொடா்ந்து பல கட்டப் போராட்டங்கள் நடத்துவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT