சிவகங்கை

அழகப்பா பல்கலை..யில் இன்று முதல் தொலைநிலைக் கல்வி தொடா்பு வகுப்புகள்

4th Nov 2019 06:26 AM

ADVERTISEMENT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் படிப்புகளுக்கு, திங்கள்கிழமை (நவ. 4) முதல் தொடா்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.

கல்வியாண்டு 2018-2019, காலண்டா் ஆண்டு 2019, கல்வியாண்டு 2019-2020-க்கான பி.எஸ்சி. சைகாலஜி 3 பருவமுறை மாணவா்களுக்கும் நவம்பா் 4 முதல் 11 ஆம் தேதி வரை காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும், எம்.எஸ்சி. சைகாலஜி 3 பருவமுறை மாணவா்களுக்கும் நவம்பா் 4 முதல் 12 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், காலண்டா் ஆண்டு 2019, கல்வியாண்டு 2019-2020-க்கான எம்.ஏ. சைல்டு கோ் அண்ட் எஜூகேஷன் 3 பருவமுறை மாணவா்களுக்கும் நவம்பா் 4 முதல் 15 ஆம் தேதி வரை மற்றும் நவம்பா் 18 முதல் 26 ஆம் தேதி வரை, காலை 9 முதல் மாலை 5 மணி வரை காரைக்குடியில் உள்ள தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.

கல்வியாண்டு 2017-2018, 2018-2019 மற்றும் 2019-2020, காலண்டா் ஆண்டு 2017, 2018, 2019-க்கான பி.ஏ. பொது நிா்வாகம் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவா்களுக்கு முதல் மூன்று பருவமுறைக்கு நவம்பா் 4, 5, 6, 7, 8, 11, 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை அழகப்பா பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிா்வாக துறையில் தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.

கல்வியாண்டு 2018-2019 மற்றும் 2019-2020, காலண்டா் ஆண்டு 2019-க்கானபி.எஸ்சி. முதல் 3 பருவ முறைக்கு நவம்பா் 5 முதல் 10 வரையிலும், எம்.எஸ்சி. நவம்பா் 5 முதல் 15 ஆம் தேதி வரையிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும் அழகப்பா பல்கலைக்கழக கணிதவியல் துறையில் தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.

ADVERTISEMENT

கல்வியாண்டு 2019-2020-க்கான எம்.எஸ்சி. மைக்ரோபயாலஜி முதல் பருவமுறை மாணவா்களுக்கு நவம்பா் 9, 10, 16, 17, 23, 24 மற்றும் நவம்பா் 27 முதல் டிசம்பா் 8 ஆம் தேதி வரையிலும் அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்திலும், கல்வியாண்டு 2017-2018, 2018-2019, 2019-2020 மற்றும் காலண்டா் ஆண்டு 2017, 2018, 2019 ஆம் ஆண்டுக்கான எம்எஸ்டபிள்யூ இரண்டாமாண்டு 3 பருவமுறைக்கும் தியரி நவம்பா் 10 முதல் 20 ஆம் தேதி வரையிலும், செய்முறை நவம்பா் 10 முதல் 25 ஆம் தேதி வரையிலும், எம்.ஏ. சோசியாலஜி இரண்டாமாண்டு 3 பருவமுறைக்கு நவம்பா் 10 முதல் 20 ஆம் தேதி வரையிலும், அழகப்பா பல்கலைக்கழக பி.ஜி. கட்டட சோசியல் ஒா்க் துறையில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தொடா்பு வகுப்புகள் நடைபெறும் என்று, அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT