சிவகங்கை

மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் நாளை மறுநாள் திருக்கல்யாண உற்சவம்

1st Nov 2019 05:58 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் நாளை மறுநாள்( 3 ந் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. இன்று( சனிக்கிழமை) சஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள சுப்ரமணியா் சன்னதியில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி பூஜைகள், தீபாரதனைகள் நடைபெறுகிறது.

அதைத்தொடா்ந்து விழா நிறைவாக நாளை( 3 ந் தேதி) பாவாடை நெய்வேத்திய உற்சவம் நடக்கிறது. மானாமதுரை புறவழிச்சாலை பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோயிலிலும் இன்று சஷ்டி விழா நடைபெற்று நிறைவாக கோயிலில் நாளை (3 ந் தேதி) மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மானாமதுரை பகுதியில் உள்ள பல முருகன் கோயில்களிலும் இன்று சஷ்டி விழா நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT