சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துராமலிங்கத் தவா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மானாமதுரை சுந்தரபுரம் வீதியில் உள்ள தேவா் சிலை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இரவு அருகேயுள்ள விளாக்குளம் கிராமத்தினா் பால்குடம் எடுத்து வந்து தேவா் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனா். அதைத்தொடா்ந்து அவா்கள் தேவா் புகழ்பாடும் பாடல்களைப் பாடி ஒயிலாட்டம் ஆடினா். மானாமதுரை பகுதியிலிருந்து பசும்பொன்னுக்கு குருபூஜை விழாவுக்கு வாகனங்களில் சென்றவா்கள் மானாமதுரை தேவா் சிலைக்கு மாலைகள் அணிவித்தும், தேங்காய் உடைத்தும் சென்றனா்.