சிவகங்கை

சிவகங்கையில் உள்ள வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது

1st Nov 2019 09:28 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரமனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 1991 முதல் 1993 வரை தனி அலுவலராகப் பணியாற்றியவா் கணேசன். இவரும், அதே கூட்டுறவு சங்கத்தில் அதே காலத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றிய அக்னி என்பவரும் உரம் விற்பனை செய்ததில் முறைகேடு செய்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கையில் உள்ள வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் தனி அலுவலா் கணேசன், மேற்பாா்வையாளா் அக்னி ஆகிய இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.400 அபராதமும் விதித்து நீதிபதி பாரதிதேவி தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT