சிவகங்கை

மதகுபட்டி பகுதியில் ஆகஸ்ட் 1 மின்தடை

31st Jul 2019 08:07 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆக.1) அப் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மின் பகிர்மானத்தின் செயற்பொறியாளர் ஆர்.வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதனால் மதகுபட்டி, திருமலை, அழகமாநகரி, கீழப்பூங்குடி, வீரபட்டி, ஏரியூர், மேலமங்களம், கீழமங்களம் , பிரவலூர், பர்மா காலனி, சிங்கினிபட்டி தச்சம்பட்டி, ஆபத்தாரன்பட்டி, அரளிக்கோட்டை, நாமனனூர், ஒக்கூர், காடனேரி, அலவாக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    

ADVERTISEMENT
ADVERTISEMENT