சிவகங்கை

திருப்பத்தூரில் முன் அறிவிப்பின்றி மின்வெட்டு பொதுமக்கள், வியாபாரிகள் அவதி

22nd Jul 2019 09:36 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அடிக்கடி முன் அறிவிப்பின்றி மின்வெட்டு செய்யப்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
திருப்பத்தூர் பகுதியில் தினந்தோறும் இரவு, பகல் வேளைகளில் முன் அறிவிப்பு இன்றி பல முறை மின்தடை செய்யப்படுகிறது. இதனால், ஒரு நாளைக்கு காலை முதல் நள்ளிரவு வரையிலும் சுமார் 15 நிமிடங்கள் தொடங்கி, அதிகபட்சமாக 2 மணி நேரம் வரையிலும் பல முறை மின் தடை செய்யப்படுகிறது. இதனால் மின்சாரத்தைப் பயன்படுத்தி தொழில் செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டோர் உள்ளிட்டோரும் அவதிப்படுகின்றனர். மேலும், இந்த திடீர் மின் வெட்டு காரணமாக மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்படுவதால் தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான நாள்களில் இப்பகுதிகளில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, பகல் 12.00 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.  இதற்கிடையில் இது போன்ற முன்னறிவிப்பில்லாத மின் தடையால் பொதுமக்கள் மேலும் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே, இப்பகுதியில் தடையில்லா மின்சார விநியோகம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT