சிவகங்கை

தாயமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

16th Jul 2019 07:51 AM

ADVERTISEMENT

இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. 
பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள தாயமங்கலத்தை தமிழக அரசு சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும், கோயில் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க வேண்டும், இங்குள்ள பகுதிநேர அரசு ஆரம்ப சுகாராத நிலையத்தை முழுநேர சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும், சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த பிரசார இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
கட்சியின் தாலுகா செயலாளர் அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT