சிவகங்கை

கவிமணி குழந்தைகள் சங்க கூட்டம்

16th Jul 2019 07:51 AM

ADVERTISEMENT

காரைக்குடியில் கவிமணி குழந்தைகள் சங்கத்தின் மாதக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைக் க விஞர் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கவிமணி தேசிக விநாயகம், காமராஜர் பிறந்தாள் ஆகியோரது நினைவாகக் குழந்தைகள் கவிமணி பாடல்களைப் பாடினர். மேலும் காமராஜரின் தொண்டுகள் குறித்துப்பேசினர். 
மழைநீர்சேமிப்பு மற்றும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது. கூட்டத்தில், ஜூலை மாதம் பிறந்த சங்க உறுப்பினர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. சங்க உறுப்பினர் சந்தியா "சுட்டி ஸ்டார்' ஆகத் தேர்வானதற்குப் பாராட் டுத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னதாக சங்க அமைப்பாளர் தேவி நாச்சியப்பன் வரவேற்றுப் பேசினார். முடிவில் துணை அமைப்பாளர் நாச்சியப்பன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT