காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் ராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர் நாகப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறைத்தலைவர் ஜான் பாஸ்கோ குழுவினர் செய்திருந்தனர். பள்ளி தாளாளர் சத்தியன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.