சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை  பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

12th Jul 2019 09:47 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 13) பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
      இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.     அந்தந்த வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்-பதிவாளர்கள் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
   இதில் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம் இலந்தங்குடி, மானாமதுரை வட்டம் மிளகனூர், இளையான்குடி வட்டம் அரண்மனைக்கரை, காரைக்குடி வட்டம் பெரியகோட்டை, தேவகோட்டை வட்டம் ஈழொலிவயல், திருப்பத்தூர் வட்டம் ரணசிங்கபுரம், திருப்புவனம் வட்டம் பூவந்தி, காளையார்கோவில் வட்டம் ஆண்டூரணி,சிங்கம்புணரி வட்டம் பிரான்மலை.

ADVERTISEMENT
ADVERTISEMENT