சிவகங்கை

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில்  பூச்சொரிதல் திருவிழா கொடியேற்றம்

6th Jul 2019 08:58 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 65-ஆம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு, காப்புக் கட்டுதலுடன் கொடியேற்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
       இத் திருவிழா ஆனி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, கோயில் முன்புள்ள கொடி மரத்துக்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் காப்புக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
       மாலையில், சிவகங்கையில் உள்ள தெப்பக்குளத்திலிருந்து கோயில் பூசாரி கரகம் எடுத்து வந்து கோயிலில் இறக்கி வைத்தார். பின்னர், கோயில் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். 
 முக்கிய விழாவான பூச்சொரிதல் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT