சிவகங்கை

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

4th Jul 2019 08:04 AM

ADVERTISEMENT

மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத அமாவாசை யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
 இதையொட்டி கோயிலில் உள்ள யாகசாலையில் புனிதநீர் கடம் வைத்து யாகம் வளர்த்து அதில் மிளகு, பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி, பூ மாலைகள், திரவியப் பொருள்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல பொருள்கள் இடப்பட்டன. ஏராளமான வேத விற்பன்னர்கள் யாகத்தை நடத்தினர். கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் யாக நிகழ்ச்சியைக் கண்டு தரிசித்தனர். யாகத்தில் பூர்ணாஹூதி முடிந்து மகா தீபாராதனை காட்டப்பட்டதும் மேளதாளத்துடன் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு புனிதநீரால் பாதசமர்ப்பணம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT