சிவகங்கை

இளைஞருக்கு கத்திக்குத்து: பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

4th Jul 2019 08:04 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை இளைஞரை கத்தியால் குத்தியதாக பள்ளி மாணவர்கள் மூவர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முருகானந்தம் (20). இவர் பூவந்தியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அருகேயுள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இந்த மாணவரும், இதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், 9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவர் மற்றும் தினேஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து முருகானந்தத்தை கத்தியால் குத்தினார்களாம். இதில் காயமடைந்த இவர் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் முருகானந்தம் அண்ணன் கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து 3 மாணவர்கள் மற்றும் தினேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT