சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவேகம்பத்தூர் வளனை முத்துப்பட்டினம் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் போலீஸார் அனுமதியின்றி நடைபெற்றதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மீது திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.