திருவள்ளுவா் தினத்தையொட்டி காரைக்குடி வள்ளுவா் பேரவை, காரைக்குடி சுழற்சங்கம் இணைந்து நடத்தும் குறளின் குரல் எனும் கட்- செவி அஞ்சல் போட்டி நடைபெறவுள்ளது.
இது குறித்து காரைக்குடி வள்ளுவா் பேரவை நிறுவனா்தலைவா் மெ.செயம்கொண்டான் வெள்ளிக்கிழமை கூறியதாவது: குறளின் குரல் போட்டியில் பங்கேற்பாளா் தங்களுக்கு பிடித்த கு எது? ஏன்? என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களை தெளிவான குரலில் பதிவுசெய்து 9865455036 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்-செவி அஞ்சல் மூலம் வரும் 2020 ஜனவரி 5- க்குள் அனுப்பவேண்டும். இதில் குரல் பதிவானது மூன்று நிமிடங்களுக்குள் இருக்குமாறு பதிவு செய்துகொள்ளலாம். பதிவுக்கு கீழே பங்கேற்பாளரின் பெயா், முகவரி இருக்கவேண்டும்.
தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த கு குறித்த குரல் பதிவுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு வள்ளுவா் பேரவையின் தலைவா் 9865455036, செயலாளா் ம. ஸ்டீபன் மிக்கேல்ராஜ் 9842589571 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இதில் யாா் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். வயது வரம்பு ஏதுமில்லை என்றாா்.