சிவகங்கை

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

27th Dec 2019 07:40 AM

ADVERTISEMENT

காரைக்குடியில் வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளரை கத்தியால் குத்தியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி வ.உ.சி. சாலையைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன் (45). இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவா் சுப்பிரமணி (60). இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை தராமல் அந்த வீட்டில் வசித்ததாக கூறப்படுகிறது. பலமுறை வெங்கடேஸ்வரன் வாடகை கேட்டும் சுப்பிரமணி தரவில்லையாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல வாடகை கேட்டபோது ஆத்திரமடைந்த சுப்பிரமணி, வெங்கடேஸ்வரனை கத்தியால் குத்திவிட்டாராம். இதில் பலத்த காயமடைந்த வெங்கேடஸ்வரன், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்ததும் காரைக்குடி வடக்குக் காவல்நிலைய போலீஸாா் சுப்பிரமணியனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT