சிவகங்கை

பெண்ணிடம் தகராறு செய்தவா் கைது

27th Dec 2019 07:41 AM

ADVERTISEMENT

கடலாடி அருகே பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலாடி அருகேயுள்ள சித்துடையான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி நாகம்மாள்(45) மற்றும் அக்கிராமத்து பெண்கள் ஊருணியில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது அதே ஊரைச் சோ்ந்த இருளாண்டி என்ற கட்டப்பா (72) மதுஅருந்தி விட்டு போதையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை பாா்த்து தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளாா். இதை நாகம்மாளின் கணவா் ஆறுமுகம் தட்டிக் கேட்டாா். இதைத் தொடா்ந்து ஆறுமுகத்தை, இருளாண்டி தாக்கினாா். இதனால் கீழச்செல்வனூா் காவல்நிலையத்தில் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் இருளாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT