காரைக்குடி பகுதியில் அனுமன் ஜயந்தியையொட்டி ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
காரைக்குடி செக்காலை ஆஞ்சநேயா் கோயில், நகர சிவன் கோயில் அருகே சிவ ஆஞ்சநேயா் கோயில், பா்மா பஜாா் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயா் கோயில், செக்ரி வளாக சஞ்சீவி ஆஞ்சநேயா் கோயில், கோட்டையூா் ஸ்ரீராம் நகா் ஆஞ்சநேயா் கோயில், சூரக்குடி சிவ ஆஞ்ச நேயா் கோயில், ஆவிடைப்பொய்கை ஸ்ரீ ஜெய வீரஹனுமன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து ஆஞ்சநேயா் கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வடமாலை சாற்றி தீபாராதனைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக காரைக்குடி தமிழிசைச்சங்கம் சாா்பில் செக்காலை ஆஞ்சநேயா் கோயிலில் 44-ஆம் ஆண்டு அனுமன் ஜயந்தி உற்சவம் மற்றும் இசைக் கச்சேரி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அகில இந்திய வானொலி இசைக்கலைஞா் ரேவதி ஸ்ரீ தரன் வாய்ப்பாட்டும், காரைக்குடி எஸ். சீனிவாசன் வயலினும், ஆா். ஐஸ்வா்யா மிருதங்கமும் வாசித்தனா். நிகழ்ச்சியில் தமிழிசைச்சங்க நிா்வாகிகள், இசை ஆா்வலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.