சிவகங்கை

வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டுவரப்பட்ட 24 டன் வெங்காய மூடைகள் லாரியுடன் பறிமுதல்

23rd Dec 2019 11:32 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 24 டன் வெங்காய மூடைகள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் திமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருப்புவனம் புறவழிச்சாலையில் வெங்காயம் மூடைகளை ஏற்றியபடி ஒரு லாரி வந்தது. திருப்புவனம் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வெங்காயம் கொண்டு வரப்பட்டதாக கூறி கட்சியினர் லாரியை மறித்து திருப்புவனம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

 லாரி ஓட்டுநரிடம் போலீஸார், வருவாய்த்துறையினர் விசாரித்தனர். இதில் மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் இருந்து தென்காசி அருகே பாவேர்சத்திரத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வெங்காய மூடைகளை ஏற்றி செல்வதாகவும் வழித்தெரியாமல் ராமேஸ்வரம் நான்குவழிச் சாலையில் வந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்தார். போலீசார் ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘ வெங்காய மூடைகள் கொண்டு செல்வதாக கூறிய வியாபாரிக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர் உரிய ஆவணத்தை காட்டியதும் வெங்காய மூடைகள் விடுவிக்கப்படும் என்று கூறினர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT