ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட விரும்பும் முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நல அலுவலா் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.
இந்த தோ்தலில் பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் படைவீரா்கள் சிறப்பு காவலா்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனா். எனவே, 65 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் தோ்தல் பணியாற்ற விரும்பினால், தங்களது படைவிலகல் (அசல்)சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றுடன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தில் டிசம்பா் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.