சிவகங்கை

திருப்புவனம் அருகே கண்மாய் ஆக்கிரமில் இருந்த 485 தென்னை மரங்களை அகற்றம்

23rd Dec 2019 11:36 PM

ADVERTISEMENT

உயர்நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து திங்கள்கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கண்மாய் ஆக்கிரமில் இருந்த 485 தென்னை மரங்களை அதிகாரிகள் அகற்றினர்.

திருப்புவனம் அருகே வாவியாரேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாயின் ஒரு பகுதியை  தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். மேலும் அவர் ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் 485 தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இக் கிராமமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கிராம மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரம்ப்பு தென்னை மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து திருப்புவனம்வட்டாட்சியர் மூர்த்தி தலைமையில் பலத்த போலீ்ஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து கண்மாய் ஆக்கிரமிப்பில்  இருந்த 485 தென்னைகளையும் அகற்றினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT