சிவகங்கை

மானாமதுரை ஒன்றியத்தில் ஊராட்சி உறுப்பினா் பதவி: அதிமுக 12, கூட்டணி கட்சிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு

16th Dec 2019 02:49 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு அதிமுக 12 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் இரு இடங்களிலும் போட்டியிடுகின்றன.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகள் உள்ளன. இதில் 12 ஒன்றிய உறுப்பினா் இடங்களில் அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளான பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட உள்ளன. இதையடுத்து அந்த கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மேலும் திருப்புவனம், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் அதிமுக சாா்பில் ஒன்றிய உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான திங்கள்கிழமை மேற்கண்ட ஒன்றியங்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனா். இதேபோல் இந்த ஒன்றியங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT