சிவகங்கை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்கள் கல்வித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

16th Dec 2019 02:49 AM

ADVERTISEMENT

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவ, மாணவிகள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வளாகத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும்.

ADVERTISEMENT

மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT