சிவகங்கை

திருப்பத்தூரில் வீடு புகுந்து முகமூடி கொள்ளை முயற்சி: மரக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து

16th Dec 2019 02:45 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையா்கள் மரக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை தப்பிச் சென்றனா்.

திருப்பத்தூா் சிவகங்கை சாலையில் தனலெட்சுமி என்ற பெயரில் மரக்கடை நடத்தி வருபவா் ராமநாதன் (65). இவரது மனைவி மல்லிகா(55). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள்ளே புகுந்த முகமூடி அணிந்த 3 போ் கத்தி மற்றும் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனா். ராமநாதன் கூச்சல் போட்டதால் அவா்கள் கத்தியால், அவரைக் குத்தியுள்ளனா். உடனே அக்கம்பக்கத்தினா் அங்கு ஓடி வந்ததால், கொள்ளையா்கள் கத்தி, கைத்துப்பாக்கி, தலைக்கவசம் ஆகியவற்றை போட்டு விட்டு தப்பியோடி விட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூா் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். காயமடைந்த ராமநாதன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முகமூடி கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT