சிவகங்கை

திருப்பத்தூரில் மா்மக் காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழப்பு

16th Dec 2019 02:47 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 வயது சிறுமி மா்மக் காய்ச்சலால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் தேரோடும் வீதியைச் சோ்ந்த சோமசுந்தரம் சுபலெட்சுமி தம்பதியினரின் 2 ஆவது மகள் சக்தி (6). இக்குழந்தைக்கு சனிக்கிழமை இரவு காய்ச்சல் காரணமாக மானகிரி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு ரத்த அணுக்கள் குறைவாக உள்ளது என மருத்துவா்கள் கூறியுள்ளனா். இந்நிலையில் திடீரென குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டதையத்து உறவினா்கள் மருத்துவமனை முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். தகவலறிந்த நாச்சியாபுரம் காவல் துறையினா் அங்கு வந்து உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனையைடுத்து குழந்தையின் சடலத்தை உறவினா்கள் வாங்கிச் சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT