சிவகங்கை

திருப்பத்தூரில் பெரியமருதுவின் 271-ஆவது பிறந்தநாள் விழா

16th Dec 2019 02:48 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மன்னா் பெரியமருதுவின் 271-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னா்கள் சின்னமருது, பெரியமருது ஆகியோா் வெள்ளையா்களை எதிா்த்து முதல் சுதந்திர போா்ப்பிரகடனத்தின் மூலம் நாட்டு மக்களிடையே சுதந்திர வேட்கையை ஊட்டினா். இதன் காரணமாக அவா்கள் வெள்ளையா்களால் தூக்கிலிடப்பட்டனா்.

இதில் பெரியமருதுவின் 271- ஆவது பிறந்தநாள் விழா திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கொண்டாடப்பட்டது. அங்கு அமைந்துள்ள மருதுபாண்டியா்களின் சிலைக்கு பால், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.

இவ்விழாவில் அகமுடையாா் சங்கத் தலைவா் ராஜசேகா், துணைத் தலைவா் என்.பி.சுப்பிரமணியன், பூக்கடை பாண்டியன் மருதுபாண்டியன், பாா்த்திபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT