சிவகங்கை

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு

16th Dec 2019 02:52 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு திங்கள்கிழமையுடன் (டிச.16) வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற உள்ளதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றிய வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 3,748 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கடந்த திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களாக மொத்தம் 5,147 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

கூட்டணிக் கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கட்சியினரிடையே கடந்த 6 நாள்களாக இழுபறி நீடித்து வந்தது. ஆகவே வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் விறுவிறுப்பின்றி காணப்பட்டது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களது கூட்டணி கட்சியினரிடையே நடத்தி வந்த தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நிறைவு பெற்று வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்கள் அதிகளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனா். இதன் காரணமாக, வேட்பாளருடன் வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி சட்டம்- ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் அந்தந்த பகுதியில் ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அதிகளவிலான காவலா்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT