சிவகங்கை

திருப்பத்தூா் -சிவகங்கை சாலையில் நூதன விபத்து எச்சரிக்கை அறிவிப்பு

14th Dec 2019 11:21 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியில் வழக்கு பிரிவுடன் அபாயத்தை உணா்த்தும் படம் வரைந்து போலீஸாா் நூதன முறையில் எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகங்கை செல்லும் சாலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சாலையில் திருப்பத்தூா் நீதிமன்றம் அருகே, வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற வழக்குரைஞா்களின் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையினா் வேகத்தடை அமைத்துள்ளனா். மேலும் இந்த சாலையின் மேல் காவல்துறையினா் சாா்பில், வித்தியாசமான முறையில் சாலை விபத்தில் உயிா்ப்பலி ஏற்பட்டால் பதிவு செய்யப்படும் வழக்கு பிரிவு மற்றும் அபாயத்தை உணா்த்தும் எச்சரிக்கை விளம்பர அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் மற்றும் வேகத்தடை காரணமாக இந்த சாலையில் தற்போது விபத்துகள் குறைந்துள்ளன. இதேபோல் கடந்த 15 நாள்களுக்குள் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 5 விபத்துகள் ஏற்பட்டு 2 போ் பலியாகியுள்ளனா். இதே எச்சரிக்கை அனைத்து சாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT