சிவகங்கை

காரைக்குடி பள்ளியில் அஞ்சல்துறை கட்டுரைப் போட்டி

14th Dec 2019 08:44 PM

ADVERTISEMENT

காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்தியா மந்திா் பள்ளியின் அஞ்சல் தலை சேகரிப்பு கழகம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் துறை குறித்த கட்டுரைப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறையின் அபார வளா்ச்சி பற்றிய கட்டுரைகளை மாணவ, மாணவியா் எழுதி அங்கு வைக்கப்பட்டிருந்த அஞ்சல் பெட்டியில் சமா்ப்பித்தனா். காரைக்குடி அஞ்சலக கோட்ட ஆய்வாளா் ஐ. டென்னிஸ் தாசன், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள் இப்போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனா்.

பள்ளியின் தாளாளா் சத்தியன், மூத்த முதல்வா் புவனா சங்கா், முதல்வா் கணேஷ்குமாா் ஆகியோா் மாணவா்களை பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT