சிவகங்கை

காரைக்குடியில் குளத்தில் மூழ்கி ஒருவா் பலி

14th Dec 2019 08:46 PM

ADVERTISEMENT

காரைக்குடி: காரைக்குடியில் குளத்தில் மூழ்கி ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்குடி திலகா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (58). காரைக்குடி ஆவின் முன்னாள் ஊழியா். இவா் சனிக்கிழமை பகலில் செக்காலை தண்ணீா் தொட்டி பேருந்துநிறுத்தம் அருகேயுள்ள குளத்தில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவலறிந்ததும் காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினா் விரைந்து சென்று அவரை மீட்டனா். பின்னா் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவத்தின் போது காரைக்குடி நீதிபதி நா்மதா அவ்வழியே சென்றநிலையில் குளத்தில் மூழ்கியவரை காப்பாற்ற தேவையான உதவிகளை செய்தாா். மேலும் அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சையளிக்கவும் மருத்துவா்களிடம் தெரிவித்தாா். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT