சிவகங்கை

மதகுபட்டி அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி 25 போ் காயம்

11th Dec 2019 08:48 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கல்லலிலிருந்து மதகுபட்டி வழியாக மதுரைக்கு தனியாா் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை கல்லலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த போது மதகுபட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 18 மாணவ, மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த மதகுபட்டி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT