சிவகங்கை

சிவகங்கையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

11th Dec 2019 08:50 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செட்டியூருணிக் கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மன்னா் மேல்நிலைப் பள்ளியின் செயலா் குமரகுரு தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியா் சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, மன்னா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள், சுமாா் 300-க்கும் மேற்பட்ட பனை விதைகள் மற்றும் பல்வேறு மரக்கன்றுகளை நட்டனா். மேலும் அந்தப் பகுதியில் ஏற்கெனவே உள்ள மரங்களை பராமரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டனா்.

இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியா் வே. தா்மராஜ் உள்பட அரசு அலுவலா்கள், பள்ளி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT