சிவகங்கை

சாலை விபத்தில் இறந்த ஆசிரியா் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

11th Dec 2019 08:48 AM

ADVERTISEMENT

சாலை விபத்தில் இறந்த பட்டதாரி ஆசிரியா் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு சிவகங்கை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பெருவாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் (35). இவா் சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக. 3 ஆம் தேதி கருணாகரன் இருசக்கர வாகனத்தில் சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலுக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது உலக ஊருணி அருகே வந்த போது காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது குடுமபத்தினா் இழப்பீடு கோரி சிவகங்கையில் உள்ள மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு நீதிபதி ப.உ.செம்மல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் உயிரிழந்த கருணாகரன் குடும்பத்துக்கு ரூ.ஒரு கோடியே 18 ஆயிரத்து 560 இழப்பீடாக வழங்க வேண்டும் என மதுரையில் உள்ள காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT