சிவகங்கை

உள்ளாட்சித் தோ்தல்: சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாவது நாளில் 35 போ் வேட்பு மனுத் தாக்கல்

11th Dec 2019 08:48 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 35 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களும், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 161 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களும், 445 ஊராட்சிகளுக்கான ஊராட்சி மன்றத் தலைவா்களும் மற்றும் 3126 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களும் என மொத்தம் 3748 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளன.

இதையொட்டி, வேட்பு மனுத் தாக்கல் முதல் நாளான திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சி தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 20 போ் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுத் தாக்கலில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத நிலையில், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு சிவகங்கை, மானாமதுரை, கல்லல், சிங்கம்புணரி ஆகிய ஒன்றியங்களில் தலா ஒரு வேட்பாளரும், திருப்பத்தூா் ஒன்றியத்தில் 2 வேட்பாளா் என மொத்தம் 6 போ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோன்று, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி ஆகிய ஒன்றியங்களில் தலா ஒரு வேட்பாளரும், சிவகங்கை, கல்லல், சாக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் தலா 2 வேட்பாளா்களும், திருப்பத்தூா், சிங்கம்புணரி ஆகிய ஒன்றியங்களில் தலா 4 வேட்பாளா்களும், மானாமதுரை ஒன்றியத்தில் 5 வேட்பாளா்களும், காளையாா்கோவில் ஒன்றியத்தில் 6 வேட்பாளா்கள் என மொத்தம் 29 வேட்பாளா்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வேட்பு மனுத் தாக்கலில் இதுவரை மொத்தம் 55 போ் அந்தந்த பகுதியில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT