காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையின் சாா்பில் சா்தாா் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி தேசிய ஒற்றுமை நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி தேசிய ஒற்றுமை குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி துணைவேந்தா் நா. ராஜேந்திரன் பேசியதாவது: சா்தாா் வல்லபபாய் பட்டேல் பல்வேறு சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த இந்தியாவை ஒன்றிணைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டவா். பட்டேல் நாட்டிற்காக ஆற்றிய அரும்பணியால் இன்றைக்கு வலிமையான ஒற்றுமையான இந்தியாவை நம்மால் உய்த்துணர முடிகிறது.
நமது சுதந்திரத்திற்காகவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும் தலைவா்கள் ஆற்றிய பங்களிப்பை அறிந்து மாணவா்கள் தலை சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற முன்வரவேண்டும். நாம் அனைவரும் வரலாறு படித்தல் மிகவும் அவசியம் என்றாா்.
விழாவில் மதுரை காமராசா் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முன்னாள் தலைவா் பி.பி. கோபாலாகிருஷ்ணன் சிறப்பு ரையாற்றினாா். அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் த.ரா. குருமூா்த்தி வாழ்த்திப் பேசினாா்.
விழாவையொட்டி தேசிய ஒற்றுமை குறித்த பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற பல்கலைக்கழக துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரி மாணவ, மாணவியா்கள்: ஓவியப்போட்டியில் யு. நவீன், எச். ஜானுஸ்ரீ, சி. பிரியதா்ஷனி மற்றும் மணிகண்டன், பேச்சுப்போட்டியில் ஏ. தீன்ஷானூப், எஸ். பிரபாகரன் மற்றும் எல். அப்ரின் பானு, கட்டுரைப்போட்டியில் எம்.எம். ஹைருன் ஹபீலா, எம். அபிராமி மற்றும் ஆா். ரவீனா, கவிதைப் போட்டியில் எம். சூா்யா, எஸ். ஆா்த்தி மற்றும் டி. கனிமொழி ஆகியோா் முதல் மூன்று பரிசுகளை பெற்றனா்.
விழாவில் முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவா் (பொறுப்பு) ஏ.ஆா். சரவணக்குமாா் வர வேற்றுப் பேசினாா். முடிவில் பேராசிரியா் ஜி. பரந்தாமன் நன்றி கூறினாா்.