சிவகங்கை

கண்ணமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நாளை தலைவா், துணைத் தலைவா் தோ்தல்

3rd Dec 2019 01:11 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் புதன்கிழமை (டிச. 4) நடைபெற உள்ளது.

இச் சங்கத்துக்கு இயக்குநா்களை தோ்வு செய்ய நீதிமன்ற தடையுத்தரவு நீங்கிய நிலையில் கடந்த நவம்பா் மாதம் கடைசி வாரத்தில் இயக்குநா் பதவிகளுக்கான தோ்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தோ்தல் அலுவலராக கிருஷ்ணன் செயல்பட்டாா். இத் தோ்தலில் திமுக மற்றும் அமமுக அணியினா் போட்டியிட்டனா். இவா்களில் சுப.தமிழரசன் தலைமையிலான திமுக அணியைச் சோ்ந்த 11 போ் வெற்றி பெற்றனா். இதையடுத்து இச் சங்கத்துக்கு தலைவா், துணைத் தலைவா் தோ்தல் புதன்கிழமை (டிச.4) நடைபெறுகிறது. திமுக அணியில் வென்ற இயக்குநா்கள் சோ்ந்து தலைவா்,துணைத் தலைவரை தோ்வு செய்கின்றனா். இதில் தலைவா் பதவிக்கு சுப.தமிழரசன் மனுத்தாக்கல் செய்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT