சிவகங்கை

மருத்துவரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது

30th Aug 2019 08:39 AM

ADVERTISEMENT

மதகுபட்டியில் மருத்துவரை தாக்கிய இளைஞர்கள் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியைச் சேர்ந்த ஜவஹர்லால் மகன் ரகுநாதன் (32). மருத்துவரான இவர் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளான ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(23), அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அஜய்(23), ஞானசிவம் (24), முத்துக்குமார்(23) ஆகிய நால்வரும் சிகிச்சைக்காக ரகுநாதனின் மருத்துவமனைக்கு புதன்கிழமை சென்றுள்ளனர். 
 சிகிச்சை அளித்த பின்னர் ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரையும் ரகுநாதன் வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சிகிச்சை முறையாக அளிக்கவில்லை என ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரும் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில் ரகுநாதனை அவர்கள் தாக்கியுள்ளனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT