நெல்லை அருகே இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சிவகங்கை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே தெற்குவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் மணிகண்டன் (28). கட்டடத் தொழிலாளியான இவரை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (41) என்பவர் சிவகங்கையில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2 இல் சரணடைந்தார். இதையடுத்து,அவரை 15 நாள்கள் காவலில் வைக்குமாறு நீதித்துறை நடுவர் பாரதிதேவி உத்தரவிட்டார்.