நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தியாகி இமானுவேல் பேரவை ஆகியவற்றின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முனியாண்டி தலைமை வகித்தார்.
சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் கருப்புசாமி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அழகர்சாமி, தியாகி இமானுவேல் பேரவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணிச் செயலாளர் புலிப்பாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.