சிவகங்கை

ராஜபாளையம் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா

23rd Aug 2019 07:09 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளர் குமரேசன் தலைமை வகித்தார். விழாவையொட்டி மாணவ, மாணவிகள் அனைவரும் கண்ணன், ராதை போன்றும் கிருஷ்ணரின் 10 அவதாரங்களைப் போன்றும் வேடமணிந்து வந்தனர். 
மாணவி மோகனபிரபா 10 அவதாரத்தின் நோக்கத்தை  எடுத்துரைத்தார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
முடிவில் மாணவி  மகாசஞ்சனா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக அதிகாரி ட. அமுதா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT