சிவகங்கை

திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள்  திருப்பாச்சேத்தி பகுதியில் பவனி

23rd Aug 2019 07:07 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஸ்ரீ நவநீதப் பெருமாள் சுவாமி கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
       ஆடி பௌர்ணமியை முன்னிட்டு, திருக்கூடல்மலை ராமலிங்கவிலாசத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் திருவருளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதப் பெருமாள் அங்கிருந்து புறப்பாடாகி, மானாமதுரை வரை வந்து மீண்டும் ராமலிங்கவிலாசம் திரும்பும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.  
      இந்தாண்டு ஆடி பௌர்ணமிக்கு அங்கிருந்து புறப்பாடாகிய நவநீதப் பெருமாள் பல மண்டகப்படிகளில் எழுந்தருளிவிட்டு, திருப்புவனம் வழியாக திருப்பாச்சேத்தி பகுதிக்கு வந்தடைந்தார்.    பக்தர்கள் மண்டகப்படிகளில் பெருமாளை வரவேற்று பூஜைகள் நடத்தினர்.
 திருப்பாச்சேத்தியில் 10-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளிய நவநீதப்பெருமாள், அதன்பின் சின்னஆவரங்காடு, பெரிய ஆவரங்காடு, செம்பராயனேந்தல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்தார். 
   ஆகஸ்ட் 25 ஆம் தேதி பெருமாள் மானாமதுரை வந்தடைகிறார். பெருமாளை வரவேற்க பக்தர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT