சிவகங்கை

சிவகங்கையில் ஆக.30-இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

23rd Aug 2019 07:06 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சி.கே. சர்மிளா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்,  ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை உயர் அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயம் சார்ந்த குறைகளை மனு மூலமாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT