சிவகங்கை

சாத்தூரில் 677 பயனாளிகளுக்கு ரூ. 2.35 கோடியில் நலத் திட்ட உதவிகள்

23rd Aug 2019 07:11 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 677 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மஹாலில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். பால் வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ராஜவர்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர். 
இதில் வருவாய்த் துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், முதியோர் உதவித்தொகை என மொத்தம் 677 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 35 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் சேதுராமனுஜம், நகரச் செயலாளர் வாசன்டெய்சிராணி, சாத்தூர் ஒன்றியச் செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், எஸ்.டி. முனீஸ்வரன், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT