சிவகங்கை

மானாமதுரை மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவம்

11th Aug 2019 01:20 AM

ADVERTISEMENT


  மானாமதுரை கன்னார்தெரு முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். 
 இக் கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு முளைப்பாரி விழா தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். விழா நாள்களில் தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய வைபவமாக காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வைகையாற்றிலிருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். 
அங்கு இவர்கள் கோயில் முன்பு பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின் முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் கோயில் முன்பு நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சனிக்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT