திருப்புவனம் அருகே  அரசுப் பேருந்தை மறித்து கண்ணாடி உடைப்பு: ஷேர் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு

திருப்புவனம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்து, அதன் ஓட்டுநரையும் தாக்கிய

திருப்புவனம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்து, அதன் ஓட்டுநரையும் தாக்கிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட கும்பல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகே ஆவரங்குளம் கிராமத்துக்கு திங்கள்கிழமை மாலை அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. மதுரை வெற்றிலைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றியபோது, திடீரென பேருந்தை மறித்து ஒரு ஷேர் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்தவர்களை ஆட்டோ ஓட்டுநர் பேருந்தில் ஏற்றினார்.  இதனால், அரசு பேருந்து ஓட்டுநர் கலைச்செல்வனுக்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 
அதையடுத்து, இந்தப் பேருந்து ஆவரங்குளம் நோக்கி புறப்பட்டது. திருப்புவனம் அருகே சக்குடி விலக்கு பகுதியில் வந்துகொண்டிருந்த போது, ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சிலருடன் வந்து பேருந்தை திடீரென மறித்து, ஓட்டுநர் கலைச்செல்வனை தாக்கியதுடன், பேருந்தின் பின்பக்கக் கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாகிவிட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com