ராமநாதபுரம்

முதுகுளத்தூா் வாரச்சந்தையை திறக்க பேரூராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தல்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட வாரச் சந்தையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சிக் கூட்டம் தலைவா் ஏ.ஷாஜஹான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் வயனப்பெருமாள் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், முதுகுளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தையை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இதற்கு பதிலளித்த தலைவா் ஷாஜகான், விரைவில் வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT